தேசிய செய்திகள்

70 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 21 வயது வாலிபர் + "||" + A 21-year-old man who sexually abused a 70-year-old woman

70 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 21 வயது வாலிபர்

70 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 21 வயது வாலிபர்
உத்தர பிரதேசத்தில் 70 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 21 வயது வாலிபர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
லலித்பூர்,

உத்தர பிரதேசத்தின் லலித்பூர் மாவட்டத்தில் வசித்து வந்த 70 வயது மூதாட்டி கடந்த புதன்கிழமை இரவு படுத்து தூங்கியுள்ளார்.  அவர் தனியாக வீட்டில் இருந்த நேரத்தில் 21 வயது வாலிபர் ஒருவர் உள்ளே புகுந்துள்ளார்.

வீட்டில் மூதாட்டியுடன் யாரும் இல்லாத நிலையில், அந்த வாலிபர் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.  அவரது அலறலை அடுத்து வாலிபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

இதன்பின்னர் கடந்த வியாழ கிழமை பார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.  இதுபற்றி துணை ஆய்வாளர் திக்விஜய் சிங் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக அந்த வாலிபரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.  அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 70 வயது மூதாட்டியை 21 வயது வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்தது அந்த பகுதியில் வசிப்போரிடையே பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் பிரதமரை விமர்சித்து போஸ்டர் ஒட்டியதாக 12 பேர் கைது எனத்தகவல்
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து சுவரொட்டி (போஸ்டர்) ஒட்டியதற்காக 12 பேர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
2. பொன்னேரி ஏரியில் மணல் கடத்திய 2 பேர் கைது
பொன்னேரியை அடுத்த வெப்பத்துரில் உள்ள ஏரியில் மணல் கடத்தப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் வந்தது.
3. நங்கநல்லூரில் கார்களை வாடகைக்கு எடுத்து மோசடி செய்த தந்தை-மகனுக்கு வலைவீச்சு இடைத்தரகர் கைது
நங்கநல்லூரில் ரூ.25 லட்சம் கார்களை வாடகைக்கு எடுத்து மோசடி செய்த தந்தை-மகனை போலீசார் தேடி வருகின்றனர். இடைத்தரகராக செயல்பட்டவர் கைது செய்யப்பட்டார்.
4. கார்களை வாடகைக்கு எடுத்து மோசடி செய்த தந்தை-மகனுக்கு வலைவீச்சு இடைத்தரகர் கைது
கார்களை வாடகைக்கு எடுத்து மோசடி செய்த தந்தை-மகனுக்கு வலைவீச்சு இடைத்தரகர் கைது.
5. கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதியில் திருட்டுத்தனமாக மது விற்ற 10 பேர் கைது; 300 மதுபாட்டில்கள் பறிமுதல்
கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதியில், திருட்டுத்தனமாக மது விற்ற 10 பேர் கைது செய்யப்பட்டனர்.