பஞ்சாப், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மாநில கொரோனா பாதிப்பு நிலவரம்


பஞ்சாப்,  உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மாநில கொரோனா பாதிப்பு நிலவரம்
x
தினத்தந்தி 15 May 2021 5:32 PM GMT (Updated: 15 May 2021 5:32 PM GMT)

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் தீவிரமாக காணப்படுகிறது.

அமிர்தசரஸ், 

பஞ்சாப் மாநிலத்தில் இன்று 6867- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இன்று ஒரே நாளில் 217- பேர் உயிரிழந்த நிலையில் 8125- பேர் தொற்றில்  இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் தொற்று பாதிப்புடன் 77 ஆயிரத்து 789 ஆக உள்ளது. 

உத்தர பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 12,547- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 28404- பேர் குணம் அடைந்துள்ளனர். அதேபோல், கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 281- பேர் உயிரிழந்துள்ளனர்.  கொரோனா தொற்றுடன் 1 லட்சத்து 77 ஆயிரத்து 643- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 13,565- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 17,481- பேர் இன்று குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று  ஒரே நாளில் 149 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 08 ஆயிரத்து 688-ஆக உள்ளது. 

Next Story