ராஜஸ்தான், தெலுங்கானா மாநில கொரோனா பாதிப்பு விவரம்

தெலுங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,961-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தான், தெலுங்கானா மாநில கொரோனா பாதிப்பு விவரம்
Published on

ஐதரபாத்,

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 11,597- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 29,549-பேர் குணம் அடைந்த நிலையில் 157 பேர் இன்று குணம் அடைந்துள்ளனர்.

மாநிலத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 71 ஆயிரத்து 266- ஆக உள்ளது. கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 87 ஆயிரத்து 969- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 76 ஆயிரத்து 363- ஆக உள்ளது.

தெலுங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3961-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 5559-பேர் குணம் அடைந்துள்ள நிலையில், 30 பேர் ஒரு நாளில் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 49,341-ஆக உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com