தேசிய செய்திகள்

ஆந்திராவில் இன்று மேலும் 22 ஆயிரத்து 610 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Andhra Pradesh reports 22,610 new #COVID19 cases, 23,098 recoveries and 114 deaths in the last 24 hours.

ஆந்திராவில் இன்று மேலும் 22 ஆயிரத்து 610 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஆந்திராவில் இன்று மேலும் 22 ஆயிரத்து 610 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஆந்திராவில் இன்று மேலும் 22 ஆயிரத்து 610 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமராவதி,

ஆந்திர மாநிலத்தில் கொரோனா வைரசின் 2ம் அலையின் பாதிப்பு தினமும் புதிய உச்சத்தை தொட்டே அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலத்தில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது

இந்நிலையில் ஆந்திர மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாநிலத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 22 ஆயிரத்து 610 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,21,142 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 114  பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் ஆந்திர மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,800 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது மாநிலம் முழுவதும் 2,09,134 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மட்டும் 23 ஆயிரத்து 098 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளநிலையில், இதுவரை 13,02,208 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஆந்திரா, தெலுங்கானாவில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்தது; ராஜஸ்தானில் ரூ.105க்கு விற்பனை
ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ஆந்திரா, தெலுங்கானாவில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்தது.
2. ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்காள முதல்-மந்திரிகளுடன் ‘யாஸ்’ புயல் முன்னேற்பாடுகள் குறித்து அமித்ஷா ஆலோசனை
‘யாஸ்’ புயல் முன்னேற்பாடுகள் குறித்து ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்காள முதல்-மந்திரிகளுடன் உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று ஆலோசனை நடத்தினார்.
3. ஆந்திராவில் கொரோனா வைரஸ்க்கு நாட்டு மருந்து; நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்
ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கொரோனா தொற்றுக்கு இலவச நாட்டு மருந்து வாங்க ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
4. ஆந்திராவில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி - ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு
ஆந்திராவில் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவியாக டெபாசிட் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
5. ஆந்திராவில் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - அம்மாநில அரசு அறிவிப்பு
ஆந்திராவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக வரும் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.