கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,894-பேருக்கு கொரோனா

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,894-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,894-பேருக்கு கொரோனா
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. அம்மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 19,894 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிக்கப்படுபவர்களின் விகிதம் 15.97- ஆக குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பைக் கண்டறிய ஒரே நாளில் 1 லட்சத்து 24 ஆயிரத்து 537- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கையும் 2 லட்சத்து 23 ஆயிரமாக சரிந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 29,013- பேர் குணம் அடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றால் ஒரே நாளில் 186- பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் ஏண்ணிக்கை 8,641- ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்திலேயே அதிகபட்சமாக மலப்புரம் மாவட்டத்தில் 3,015-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் 2,423-பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com