தேசிய செய்திகள்

மாநகராட்சி, நகராட்சிகளில் பணியாற்றும் தற்காலிக, ஒப்பந்த ஊழியர்களுக்கும் இ.எஸ்.ஐ.மருத்துவ வசதி; மத்திய அரசு அறிவிப்பு + "||" + ESI medical facility for temporary and contract employees working in corporations and municipalities; Central Government Notice

மாநகராட்சி, நகராட்சிகளில் பணியாற்றும் தற்காலிக, ஒப்பந்த ஊழியர்களுக்கும் இ.எஸ்.ஐ.மருத்துவ வசதி; மத்திய அரசு அறிவிப்பு

மாநகராட்சி, நகராட்சிகளில் பணியாற்றும் தற்காலிக, ஒப்பந்த ஊழியர்களுக்கும் இ.எஸ்.ஐ.மருத்துவ வசதி; மத்திய அரசு அறிவிப்பு
நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சிகளில் பணியாற்றும் தற்காலிக, ஒப்பந்த பணியாளர்களுக்கும் இ.எஸ்.ஐ. மருத்துவ வசதி அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு முடிவு

மத்திய தொழிலாளர் நல அமைச்சகம்  வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகளில் ஏராளமான தற்காலிக, ஒப்பந்த பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். நிரந்தர பணியில் இல்லாததால், அவர்கள் சமூக பாதுகாப்பு திட்ட வரம்புக்குள் வராமலே இருக்கிறார்கள்.இந்த பிரச்சினையை தீர்க்க அவர்களை இ.எஸ்.ஐ. சட்ட வரம்புக்குள் கொண்டுவர மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அவர்களுக்கு இ.எஸ்.ஐ. மருத்துவ காப்பீட்டு வசதி அளிக்கப்படும்.அவர்களை இ.எஸ்.ஐ. சட்ட வரம்புக்குள் கொண்டு வருவது தொடர்பாக உரிய அறிவிப்பாணை வெளியிடுமாறு அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளை தொடர்பு கொண்டு தெரிவிக்கும்பணி, இ.எஸ்.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பலன்கள்
அதன்படி, சம்பந்தப்பட்ட மாநில, யூனியன் பிரதேச அரசுகள் அறிவிப்பாணை வெளியிட்டவுடன், அங்குள்ள மாநகராட்சி, நகராட்சிகளில் பணியாற்றும் தற்காலிக, ஒப்பந்த பணியாளர்கள் அனைவரும் இ.எஸ்.ஐ. மருத்துவ வசதிகளை பெறலாம்.நோய் பலன்கள், மகப்பேறு பலன்கள், மாற்றுத்திறனாளி சலுகைகள், பணியாளரை சார்ந்தோருக்கான பலன்கள், இறுதிச்சடங்கு செலவுகள் உள்ளிட்ட அனைத்து பலன்களையும் பெறலாம். அவர்கள் நாடு முழுவதும் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிகள் மற்றும் மருந்தகங்களில் அனைத்து மருத்துவ சேவைகளையும் பெற தகுதி பெறுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிகளின் விலை எவ்வளவு? மத்திய அரசு விவரம் வெளியீடு
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் மற்றும் ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.
2. குன்னூரில் மாதத்திற்கு 1 கோடி கொரோனா தடுப்பூசி தயாரிக்க முடியும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
மத்திய அரசு கொரோனா தடுப்பூசிக்கான மூலப்பொருட்களை கொடுத்தால் குன்னூரில் மாதத்திற்கு 1 கோடி தடுப்பூசிகளை தயாரிக்க முடியும் என நாமக்கல்லில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
3. நீல நிற ‘டிக்’குக்காகத்தான் அரசு போராடுகிறது, தடுப்பூசிக்கு மக்கள்தான் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்: ராகுல் காந்தி கிண்டல்
மத்திய அரசு நீல நிற ‘டிக்’குக்காகத்தான் போராடுவதாகவும், தடுப்பூசியை மக்கள்தான் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என்றும் ராகுல் காந்தி மத்திய அரசை கிண்டல் செய்துள்ளார்.
4. இந்த மாதத்துக்கு ‘மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் 42 லட்சம் தடுப்பூசி போதாது’; கூடுதலாக ஒதுக்க தமிழக அரசு கோரிக்கை
இந்த மாதத்துக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் 42 லட்சம் தடுப்பூசி போதாது என்றும், கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
5. மத்திய அரசு என்றும் மக்கள் துயர் தீர்க்கும் அரசாகச் செயல்படுகிறது - எல்.முருகன் அறிக்கை
மத்திய அரசு என்றும் மக்கள் துயர் தீர்க்கும் அரசாகச் செயல்படுகிறது என்று பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.