ஆந்திராவில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு


ஆந்திராவில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு
x
தினத்தந்தி 15 Aug 2021 11:59 AM GMT (Updated: 2021-08-15T17:29:45+05:30)

ஆந்திராவில் மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

ஆந்திரா,

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. தற்போது தொற்று பரவல் குறைந்து வருவதால், படிப்படியாக மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன.  அந்த வகையில், மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று ஆந்திரா அரசு அறிவித்துள்ளது. 

அதேபோல் சித்தூர் மாவட்டத்திலும் நாளை (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. பள்ளிகளில் கோவிட் விதிமுறைகளை கடைப்பிடித்து வகுப்புகள் நடத்தப்படும். ஆசிரியர்களுக்கு நூறு சதவீதம் கொரோனா தடுப்பூசி போடப்படும், எனக் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story