காங்கிரசில் இருந்து சுஷ்மிதா தேவ் விலகல்


காங்கிரசில் இருந்து சுஷ்மிதா தேவ் விலகல்
x
தினத்தந்தி 16 Aug 2021 4:56 AM GMT (Updated: 2021-08-16T10:26:57+05:30)

அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளார்.

புதுடெல்லி,

அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். முன்னாள் மக்களவை எம்.பியான சுஷ்மிதா அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இவரது விலகல் கடிதத்தை கட்சித்தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி உள்ளார். 

மேலும் கட்சியில் இருந்து இவர் விலக்குவதற்கான காரணங்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Next Story