தேசிய செய்திகள்

உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரி கல்யாண் சிங் காலமானார் - பிரதமர் மோடி இரங்கல் + "||" + Kalyan Singh Former Uttar Pradesh Chief Minister Dies At 89

உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரி கல்யாண் சிங் காலமானார் - பிரதமர் மோடி இரங்கல்

உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரி கல்யாண் சிங் காலமானார் - பிரதமர் மோடி இரங்கல்
உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி கல்யாண் சிங் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானார்
லக்னோ, 

உடல்நலக்குறைவு காரணமாக உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான கல்யாண் சிங் (89) இன்று காலமானார். 

முன்னதாக கடந்த ஜூலை மாதம் அவருக்கு உடல்நிலைக் குறைபாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஜூலை 4ஆம் தேதி முதல் அவர் அங்கு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிறுநீரகக் கோளாறு, இதயக்கோளாறு, நரம்பியல் பிரச்சினை இருந்து வந்தநிலையில், உள் உறுப்புகள் செயலிழப்பால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கல்யாண் சிங் கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 1992 வரையிலும், 1997 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை உத்தரப்பிரதேச மாநில முதல்-மந்திரியாக இருந்தார். மேலும் அவர் ராஜஸ்தான் மாநில கவர்னராகவும் இருந்துள்ளார். கல்யாண் சிங் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கல்யாண் சிங்கின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்களுக்காக குரல் கொடுத்தவர் கல்யாண் சிங். விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களை மேம்படுத்துவதற்காக அவர் பல முயற்சிகளை மேற்கொண்டார்” என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. உத்தரப்பிரதேசம்: 6 வயது சிறுவனை கொன்ற சிறுத்தை!
உ.பி.யின் கதர்னியா வனவிலங்கு சரணாலயம் அருகில் 6 வயது சிறுவன் சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்தான்.
2. உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல்: கர்ஹால் தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டி ..?
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், கர்ஹால் தொகுதியில் போட்டியிடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
3. கொரோனா அதிகரிப்பு: உத்தரப்பிரதேசத்தில் பள்ளிகள் மூடல்
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் உத்தரப்பிரதேச அரசு பள்ளிகளை மூட உத்தரவிட்டுள்ளது.
4. உத்தரப்பிரதேசம்: கள்ளநோட்டுகள் அச்சடித்த ஒருவர் கைது
கைதானவரிடமிருந்து மடிக்கணினி, கலர் பிரிண்டர், உயர்தர காகிதம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.
5. அதிக சர்வதேச விமான நிலையங்களை கொண்ட மாநிலமாகிறது உத்தரப்பிரதேசம்...!!
உத்தரபிரதேசத்தில் 2012 வரை லக்னோ மற்றும் வாரணாசி ஆகிய இரண்டு சர்வதேச விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன.