உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் டெங்கு பாதிப்புகள் 156 ஆக உயர்வு


உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் டெங்கு பாதிப்புகள் 156 ஆக உயர்வு
x
தினத்தந்தி 28 Sep 2021 3:19 AM GMT (Updated: 28 Sep 2021 3:19 AM GMT)

உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் 28 பேருக்கு டெங்கு பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு 156 ஆக உயர்வடைந்து உள்ளது.


மீரட்,

நாட்டில் கொரோனா பாதிப்புகள் பரவலாக குறைந்து வரும் சூழலில் வடமாநிலங்களில் டெங்கு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.  மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் டெங்குவால் பரவலாக மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவற்றில், உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் 28 பேருக்கு டெங்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.  இதனால், மொத்த பாதிப்பு 156 ஆக உயர்வடைந்து உள்ளது.

இதுபற்றி தலைமை மருத்துவ அதிகாரி அகிலேஷ் மோகன் கூறும்போது, இதுவரை 70 நோயாளிகள் மருத்துவமனையிலும், 86 பேர் வீட்டு தனிமையிலும் இருந்து சிகிச்சை பெறுகின்றனர்.  ஒவ்வொரு சமூக நல மையத்திலும் டெங்கு பாதிப்புகளுக்காக 10 படுக்கைகளை தயார் செய்து வைத்திருக்கிறோம் என கூறியுள்ளார்.


Next Story