புதுச்சேரியில் 2 ஆண்டுகளுக்கு பின் கொலு பொம்மை விற்பனைக்கு அரசு அனுமதி


புதுச்சேரியில் 2 ஆண்டுகளுக்கு பின் கொலு பொம்மை விற்பனைக்கு அரசு அனுமதி
x
தினத்தந்தி 8 Oct 2021 3:37 AM GMT (Updated: 8 Oct 2021 3:37 AM GMT)

புதுச்சேரியில் 2 ஆண்டுகளுக்கு பின்பு கொலு பொம்மை விற்பனைக்கு அரசு அனுமதி அளித்து உள்ளது.

புதுச்சேரி,

நவராத்திரி திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த நிலையில், நேற்று தொடங்கிய இந்த திருவிழா வருகிற 15ந்தேதி வரை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.  இதனை முன்னிட்டு துர்க்கை வழிபாடு மற்றும் விரதங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

இந்த திருவிழாவின் ஒரு பகுதியாக வீட்டில் கொலு பொம்மைகளை (களிமண்ணால் செய்யப்பட்ட பொம்மைகள்) வைப்பது வழக்கம்.  புதுச்சேரியில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்புகள் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் தொழில்கள் முடங்கி இருந்தன.  இதேபோன்று, கொலு பொம்மை விற்பனைகளும் முடங்கின.

இந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பின்பு கொலு பொம்மை விற்பனைக்கு புதுச்சேரி நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.  இதனால், கொலு பொம்மை உற்பத்தியாளர்கள் மற்றும் கடைக்காரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எனினும், கொரோனா பரவலால் வாடிக்கையாளர்கள் குறைந்த அளவிலேயே வருகை தருகின்றனர்.  இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என கடைக்காரர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.


Next Story