தேசிய செய்திகள்

நாட்டில் கொரோனா பாதிப்பு குறைவு; ஒரே நாளில் 21,257 பேருக்கு தொற்று உறுதி + "||" + Corona impact is low in the country; 21,257 people were confirmed infected in a single day

நாட்டில் கொரோனா பாதிப்பு குறைவு; ஒரே நாளில் 21,257 பேருக்கு தொற்று உறுதி

நாட்டில் கொரோனா பாதிப்பு குறைவு; ஒரே நாளில் 21,257 பேருக்கு தொற்று உறுதி
நாடு முழுவதும் ஒரே நாளில் 21,257 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா 2வது அலையின் சமீப நாட்களாக வெகுவாக பாதிப்புகள் குறைந்து வருகின்றன.  இந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், நாடு முழுவதும் ஒரே நாளில் 21,257 (நேற்று 22,431) பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.

இதனால், தொற்று வித்தியாசம் நேற்றைய பாதிப்புகளை விட ஆயிரம் பேருக்கு மேல் குறைவாக காணப்படுகிறது.  கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,38,94,312ல் இருந்து 3,39,15,569 ஆக உயர்ந்து உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 24,963 பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.  இது (நேற்று 24,602) ஆக இருந்தது.  இதனால், சிகிச்சை முடிந்து குணமடைந்து சென்றவர்கள் எண்ணிக்கை 3,32,00,258ல் இருந்து, 3,32,25,221 ஆக உயர்வடைந்து உள்ளது.  குணமடைந்தோர் விகிதம் 97.96 சதவீதம் ஆக உள்ளது.

நாட்டில் ஒரே நாளில் 271 (நேற்று 318) பேர் உயிரிழந்து உள்ளனர்.  இதனால் மொத்த உயிரிழப்பு 4,49,856ல் இருந்து 4,50,127 ஆக உயர்ந்து உள்ளது.  உயிரிழப்பு விகிதம் 1.33 சதவீதம் ஆக உள்ளது.

நாடு முழுவதும் 2,40,221 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இது நேற்று 2,44,198 பேராக இருந்தது.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி நீர் நிலை ஆக்கிரமிப்புகள் நிச்சயம் அகற்றப்படும் அமைச்சர் உறுதி
சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி தமிழகத்தில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் நிச்சயம் அகற்றப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
2. ஒமைக்ரான் பாதித்த நபருடன் தொடர்புடைய 5 நபருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் ஒமைக்ரான் பாதித்த நபருடன் தொடர்புடைய 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
3. புதுச்சேரியில் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
புதுச்சேரியில் புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. நீலகிரி பள்ளி மாணவிகள் 21 பேருக்கு கொரோனா; விடுதிக்கு சீல்
நீலகிரியில் பள்ளி மாணவிகள் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் விடுதிக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.
5. மராட்டியத்திற்கு வந்த 6 பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தென்ஆப்பிரிக்கா அல்லது ஒமிக்ரான் ஆபத்து நிறைந்த பிற நாடுகளில் இருந்து மராட்டியத்திற்கு வந்த 6 பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.