தேசிய செய்திகள்

மூத்த கன்னட நடிகர் சத்யஜித் மறைவு; திரையுலகினர் இரங்கல் + "||" + veteran actor sathyajith passes away

மூத்த கன்னட நடிகர் சத்யஜித் மறைவு; திரையுலகினர் இரங்கல்

மூத்த கன்னட நடிகர் சத்யஜித் மறைவு; திரையுலகினர் இரங்கல்
புகழ் பெற்ற கன்னட நடிகர் சத்யஜித் இன்று பெங்களூருவில் வைத்து காலமானார்.
பெங்களூரு,

கன்னட சினிமா உலகில் குணசித்திர நடிகராக வலம் வந்த சத்யஜித் இன்று பெங்களூருவில் உள்ள பௌரிங் அண்ட் லேடி கர்சண் அரசு மருத்துவமனையில்  உயிரிழந்தார். அவருக்கு தற்போது 72 வயதாகிறது. அவர் 2016-ம் ஆண்டு அவர் நீரிழிவு நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே அவர் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார்.அவருடைய இறுதிச்சடங்கு இன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை 650க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சையத் நிசாமுதின் என்னும் இயற்பெயர் கொண்ட சத்யஜித் 1983-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘அல்லா நீனே ஈஷ்வரா நீனே’ என்னும் திரைப்படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.அவருடைய மகள் ஒரு பெண் விமானியாக உள்ளார். அவருடைய மூத்த மகன் ஆகாஷ் ஜித் கன்னட சினிமாவில் நடிகராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்தமித்ரா, சிவா மெச்சிடா கண்ணப்பா, புத்நஞ்சா, சைத்ரதா பிரேமாஞ்சலி உள்ளிட்ட பல படங்களில்
முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார்.அவர் வில்லன் கதாபாத்திரங்களில் அதிகம் நடித்து புகழ் பெற்றவர்.

கன்னட திரையுலகினர் பலர் அவருடைய மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான சுமலதா அம்பரீஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில் ‘மூத்த நடிகர் சத்யஜித் மறைவு மிகுந்த வலியை தருகிறது. அவர் மன்டையதா காண்டு உள்ளிட்ட 650க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.அவர் இழப்பை தாங்கிக் கொள்ளும் சக்தியை இறைவன் அவருடைய குடும்பத்துக்கு கொடுக்க வேண்டிக் கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. செஞ்சி தொகுதி முன்னாள் எம் எல் ஏ கண்ணன் மரணம்
செஞ்சி தொகுதி முன்னாள் எம் எல் ஏ கண்ணன் மரணம்
2. ரூ.2.40 கோடி தங்கம் கடத்தல்; 18 பேர் கைது
வயிற்றுக்குள் மறைத்து வைத்து ரூ.2.40 கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்த தமிழகத்தை சேர்ந்த 18 பேர் பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
3. ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி
பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 164 ரன்கள் குவித்துள்ளது.
4. ஐபிஎல்: டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டெல்லியும் பெங்களூரு அணியும் மோதுகின்றன.
5. ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு 142 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஐதராபாத்
பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலாவதாக பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 141 ரன்கள் எடுத்துள்ளது.