

புதுடெல்லி,
பிரதமர் மோடியின் ஆலோசகராக, ஓய்வு பெற்ற உயர் கல்வித் துறைச் செயலர் அமித் கரே நியமிக்கப்பட்டு உள்ளார். மத்திய அரசின் உயர் கல்வித் துறைச் செயலராக பணியாற்றி, கடந்த மாதம் ஓய்வு பெற்றவர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமித் கரே.
அதற்கு முன் மனிதவள மேம்பாடு மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறைகளின் செயலராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசகராக அமித் கரே இன்று நியமிக்கப்பட்டு உள்ளார்.