தேசிய செய்திகள்

பணம் இல்லை என்றால் வீட்டை பூட்டாதீர்கள் - மன உளைச்சலில் கடிதம் எழுதிய திருடர்கள்! + "||" + "If You Had No Money...": Burglars Leave Note For Madhya Pradesh Official

பணம் இல்லை என்றால் வீட்டை பூட்டாதீர்கள் - மன உளைச்சலில் கடிதம் எழுதிய திருடர்கள்!

பணம் இல்லை என்றால் வீட்டை பூட்டாதீர்கள் - மன உளைச்சலில் கடிதம் எழுதிய திருடர்கள்!
மத்தியப் பிரதேசத்தில் அரசு அதிகாரியின் வீட்டிற்கு திருடச் சென்ற திருடர்கள் வீட்டில் எதுவும் இல்லாததால் கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
போபால்,

மத்திய பிரதேச மாநிலம்  தேவாச் மாவட்டத்தில் சப் கலெக்டராக பணியாற்றி வருபவர் திரிலோச்சன் சிங் கவுர். இவருக்கு சொந்தமான வீடு ஜெய்குவால் மாட்டத்தில் உள்ள கதேகான் நகரத்தில் உள்ளது. பணி நிமித்தமாக தேவாச் மாவட்டத்தில் திரிலோச்சன் தங்கியுள்ளதால் அவ்வப்போது தனது சொந்த வீட்டிற்கு செல்வதை வழக்கம். 

இந்நிலையில் கடந்த கடந்த 9-ம்தேதி  தனது வீட்டிற்கு அவர் திரும்பியபோது வீட்டின் கதவுகள் திறக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் வீட்டினுள் திருடர்கள் கைப்பட எழுதிய கடிதத்தையும் அவர் கைப்பற்றினார். 

அதில், "வீட்டில் எதுவும் இல்லை என்றால் வீட்டைப் பூட்டாதீர்கள்" என எழுதியிருந்தது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் திரிலோச்சன் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து திருடர்களைத் தேடி வந்த காவல்துறையினர் குந்தன் தாக்கூர் (32) மற்றும் சுப்பம் ஜெய்ஸ்வால் (24) ஆகிய இருவரைக் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பிரகாஷ் என்ற இளைஞரையும் தேடி வருகின்றனர்.

திரிலோச்சனின் பூட்டப்பட்டிருந்த வீட்டில் ரூ.5,500 மட்டுமே இருந்ததால் கோபமடைந்து கடிதம் எழுதி வைத்ததாக திருடர்கள் தெரிவித்தனர். அவர்களிடமிருந்து ரூ.4,000 பறிமுதல் செய்யப்பட்டது.

சப் கலெக்டர் இல்லத்தில் திருடர்கள் திருட வந்து கடிதம் எழுதி வைத்து விட்டுச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.