துணை ஜனாதிபதியின் அருணாசல பிரதேச பயணத்திற்கு சீனா எதிர்ப்பு- இந்தியா நிராகரிப்பு


துணை ஜனாதிபதியின் அருணாசல பிரதேச பயணத்திற்கு  சீனா எதிர்ப்பு- இந்தியா நிராகரிப்பு
x
தினத்தந்தி 13 Oct 2021 3:30 PM GMT (Updated: 13 Oct 2021 3:33 PM GMT)

துணை ஜனாதிபதியின் அருணாசல பிரதேச பயணத்திற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

புதுடெல்லி,

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கடந்த 9 ஆம் தேதி அருணாசல பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். துணை ஜனாதிபதியின் இந்த பயணத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சீனாவுக்கு பதிலடி கொடுத்துள்ள இந்தியா,  அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று தெரிவித்துள்ளது. 

மேலும், இந்தியத் தலைவர்கள் வழக்கமாக வேறு இந்திய மாநிலங்களுக்கு செல்வது போல் அருணாச்சலப் பிரதேச மாநிலத்திற்கும் பயணம் செய்கிறார்கள். இந்திய தலைவர்கள் இந்த மாநிலத்திற்கு வருகை தருவதற்கு எதிர்ப்பது அர்த்தமற்றது. லடாக் எல்லையில் நிலவும் தற்போதைய சூழலுக்கு காரணம், இரு தரப்பு ஒப்பந்தத்தை மீறி சீனா தன்னிச்சையாக நிலையை மாற்றியமைத்தது தான்” எனத் தெரிவித்துள்ளது. 


Next Story