பசி, வறுமையை ஒழித்த பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள் - கபில் சிபல் கிண்டல்


பசி, வறுமையை ஒழித்த பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள் - கபில் சிபல் கிண்டல்
x
தினத்தந்தி 15 Oct 2021 7:06 AM GMT (Updated: 15 Oct 2021 7:47 AM GMT)

உலக பட்டினிக் குறியீடு 116 நாடுகளுக்கான பட்டியலில் 2021ம் ஆண்டில் இந்தியா 101வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

புதுடெல்லி

உலக அளவில் பட்டினி மற்றும் ஊட்டசத்து குறைபாடு ஆகியவற்றை ஆய்வு செய்து பட்டினிக் குறியீடு பட்டியல் வெளியிடப்படுகிறது. ஐயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் அமைப்பு மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ப் ஆகிய அமைப்பும் சேர்ந்து பட்டினிக் குறியீடு பட்டியலை தயாரித்து வெளியிட்டுள்ளது.

ஊட்டச்சத்து குறைபாடு, 5-வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் சத்துணவு குறைபாட்டால் தங்கள் உயர்த்துக்கு ஏற்ற எடை இல்லாமல் இருத்தல், வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாமல் இருத்தல், 5வயதுக்கு உட்பட்ட குழந்தை உயிரிழப்புகள் ஆகிய காரணிகளை இந்தப்பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

2021ம் ஆண்டுக்கான உலக பட்டினிக் குறியீடு வெளியிடப்பட்டுள்ளது. இதில், மொத்தம் இடம் பெற்றுள்ள 116 நாடுகளில் இந்தியா 101-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.   அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளத்தை விட இந்தியா பின் தங்கியுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு 107 நாடுகளுக்கான பட்டியலில், 94-வது இடத்தில் இருந்த இந்தியா, 116 நாடுகளுக்கான பட்டியலில் 2021ம் ஆண்டில் 101வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 

பசி தீவிரமான நாடுகள் என அடையாளம் காணப்பட்ட 31 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. கடந்தாண்டு வெளியான இந்த அறிக்கையில் 107 நாடுகளில் இந்தியா 94 வது இடத்தில் இருந்தது. அண்டை நாடுகளான பாகிஸ்தான் (92), நேபாளம் (76), வங்காள தேசத்தை விட  இந்தியா பின்தங்கி உள்ளது.

இதை மேற்கோள் காட்டி  காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தனது டுவிட்டர் பக்கத்தில், 'பசி, வறுமை, உள்ளிட்டவற்றை ஒழித்த பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள்' என்று கிண்டலுடன் பதிவிட்டுள்ளார். மேலும், குளோபல் இன்டெக்ஸில் பசி தீவிரமான நாடுகளில் 2020ம் ஆண்டு இந்தியா 94 வது இடத்தில் இருந்ததையும், தற்போது 101 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



Next Story