ஷாருக்கான் மகன் வழக்கை பயன்படுத்தி லகிம்பூர் சம்பவத்தை திசைதிருப்ப முயற்சி- கபில் சிபல் குற்றச்சாட்டு


ஷாருக்கான் மகன் வழக்கை பயன்படுத்தி லகிம்பூர் சம்பவத்தை திசைதிருப்ப முயற்சி- கபில் சிபல் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 16 Oct 2021 1:50 AM GMT (Updated: 2021-10-16T07:20:14+05:30)

நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யான் கான், போதைப்பொருள் பயன்படுத்தியதற்கும், வைத்திருந்ததற்கும் ஆதாரம் இல்லை என கபில் சிபல் கூறியுள்ளார்.

புதுடெல்லி, 

காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யான் கான், போதைப்பொருள் பயன்படுத்தியதற்கும், வைத்திருந்ததற்கும் ஆதாரம் இல்லை. 

ஆனால், நிரபராதி என்று நிரூபிக்கப்படும் வரை குற்றவாளி என்பதுதான் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் புதிய சட்ட கோட்பாடு.லகிம்பூர் சம்பவத்தில் கைதான மத்திய மந்திரி அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீதிருந்து கவனம் வெற்றிகரமாக திசைதிருப்பப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story