தேசிய செய்திகள்

கன மழை நீடிக்க வாய்ப்பு: சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை + "||" + Chance of prolonged heavy rains: Devotees barred from Sami darshan at Sabarimala

கன மழை நீடிக்க வாய்ப்பு: சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை

கன மழை நீடிக்க வாய்ப்பு: சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை
ஐப்பசி மாத பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது.
திருவனந்தபுரம், 

சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவில் நடை ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பை முன்னிட்டு திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெறும். அதன்படி ஐப்பசி மாத பூஜையையொட்டி, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்தார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வழக்கமான பூஜைகளுடன் நெய்யபிஷேகம் உள்பட பூஜைகள் வருகிற 21-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறும். ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில், தினசரி 15 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. பலத்த மழை காரணமாக பம்பை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் பக்தர்கள் பம்பை ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கேரளாவில் 19-ந் தேதி வரை கன மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. அதைத்தொடர்ந்து 19-ந் தேதி வரை சபரிமலையில் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. புழல் சிறையில் ராம்குமார் மரணம்: மனித உரிமை ஆணையம் விசாரிக்க ஐகோர்ட்டு தடை
சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் மரணம் குறித்து மனித உரிமை ஆணையம் நடத்தி வரும் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2. புழல் சிறையில் ராம்குமார் மரணம்: மனித உரிமை ஆணையம் விசாரிக்க ஐகோர்ட்டு தடை
சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் மரணம் குறித்து மனித உரிமை ஆணையம் நடத்தி வரும் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3. “திருப்பதி பயணத்தை 10-15 நாட்கள் பக்தர்கள் தள்ளி வைக்க வேண்டும்” - தேவஸ்தானம் அறிவுறுத்தல்
திருப்பதி பயணத்தை தள்ளி வைக்க வேண்டும் என்று முன்பதிவு செய்திருந்த பக்தர்களுக்கு தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது.
4. சாலையில் வெள்ளநீர் ஓடுவதால்: பெரும்பாக்கம்-சோழிங்கநல்லூர் பகுதியில் 5-வது நாளாக போக்குவரத்துக்கு தடை
சாலையில் வெள்ளநீர் ஓடுவதால்: பெரும்பாக்கம்-சோழிங்கநல்லூர் பகுதியில் 5-வது நாளாக போக்குவரத்துக்கு தடை.
5. ஒமிக்ரான் பாதிப்பு; தென்ஆப்பிரிக்காவில் இருந்து பயணிகள் வர நேபாளம் தடை
ஒமிக்ரான் பாதிப்புகளை முன்னிட்டு தென்ஆப்பிரிக்காவில் இருந்து பயணிகள் வருவதற்கு நேபாளம் தடை விதித்து உள்ளது.