கேரளாவிற்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்: அமித்ஷா உறுதி


கேரளாவிற்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்: அமித்ஷா உறுதி
x
தினத்தந்தி 17 Oct 2021 6:39 AM GMT (Updated: 17 Oct 2021 6:39 AM GMT)

மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.

புதுடெல்லி,

மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக அமித்ஷா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: -

 மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். கேரளாவிற்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளோம்.  மீட்பு நடவடிக்கைகளுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழு ஏற்கனவே கேரளா விரைந்துள்ளது. அனைவரும் பாதுகாப்பாக இருக்க பிரார்த்தனை செய்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். 

கேரளாவின் தென்கிழக்கு அரபி கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக கடந்த 2 நாட்களாக கேரளா முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால் மாநில நிர்வாகம் சூழலை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. 

Next Story