கேரளாவில் கனமழை-நிலச்சரிவுக்கு காரணம் என்ன?: நிபுணர்கள் விளக்கம்


கேரளாவில் கனமழை-நிலச்சரிவுக்கு காரணம் என்ன?: நிபுணர்கள் விளக்கம்
x
தினத்தந்தி 17 Oct 2021 10:53 PM GMT (Updated: 17 Oct 2021 10:53 PM GMT)

கேரளாவை உலுக்கியுள்ள கனமழை-நிலச்சரிவுக்கு காரணம் என்ன என்பது குறித்து நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

திருவனந்தபுரம், 

கேரளாவில் பெய்துவரும் கனமழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் ஒட்டுமொத்த மாநிலமும் தத்தளித்து வருகிறது. அங்கு திடீரென கொட்டித்தீர்த்துள்ள இந்த மழைக்கு ‘மேக வெடிப்பே’ காரணம் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர் அபிலாஷ் உள்ளிட்டவர்கள் கூறுகையில், ‘இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் வெறும் 2 மணி நேரத்துக்குள் 5 செ.மீ.க்கும் அதிகமான மழை பெய்துள்ளது. இது ஒரு சிறிய வகையிலான மேக வெடிப்பு நிகழ்வாகும்’ என்று தெரிவித்தனர்.

காடுகளை தோட்டங்கள் மற்றும் பயிர் வயல்களாக மாற்றுவது போன்ற மனித நடவடிக்கைகளால் மேக வெடிப்பு, நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த விளைவுகள் மோசமடையக்கூடும் எனவும் அபிலாஷ் கூறினார். குறைந்த நேரத்தில் மிக அதிக கனமழை பெய்யும் நிகழ்வு மேக வெடிப்பு என அழைக்கப்படுகிறது. சில நேரங்களில் இது இடி மின்னலுடனோ அல்லது ஆலங்கட்டி மழையாகவோ பெய்து பெருவெள்ளத்தை ஏற்படுத்தும்.


Next Story