தேசிய செய்திகள்

ராமகிருஷ்ணா மடத்தின் மூத்த மடாதிபதி மறைவு ! + "||" + Senior monk of Ramakrishna Mission passes away.

ராமகிருஷ்ணா மடத்தின் மூத்த மடாதிபதி மறைவு !

ராமகிருஷ்ணா மடத்தின் மூத்த மடாதிபதி மறைவு !
ராமகிருஷ்ணா மடத்தின் மூத்த மடாதிபதி மறைவுக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா,

ராமகிருஷ்ணா மடத்தின் மூத்த மடாதிபதி சுவாமி அமியானந்தஜி மஹராஜ்  காலமானார். அவர் வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்றிரவு அவர் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு 90 வயது ஆகிறது.

மேற்கு வங்காள முதல்-மந்திரி  மம்தா பானர்ஜி அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவருடைய வாழ்க்கை அவரை பின்தொடரும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வழிகாட்டும் ஒளியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

அவர் ஜெயராம்பதி மையத்தின் தலைவராக 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவர்.இன்று மாலை 3.30-5.30 மணி வரை பேலூர் மடத்தில் அவருடைய உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும். இன்று இரவு 9 மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.