மோடி படிப்பறிவு இல்லாதவர் ; ராகுல்காந்தி போதைப்பொருள் விற்பவர்: காங்கிரஸ்-பா.ஜ.க கலாட்டா அரசியல்

பிரதமர் மோடியின் சர்ச்சைக்குரிய டுவீட்டை கட்சியின் சமூக ஊடக குழு நீக்கியதாக டி.கே.சிவகுமார் பின்னர் அறிவித்தார்
மோடி படிப்பறிவு இல்லாதவர் ; ராகுல்காந்தி போதைப்பொருள் விற்பவர்: காங்கிரஸ்-பா.ஜ.க கலாட்டா அரசியல்
Published on

பெங்களூரு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போதைப்பொருள் விற்பனையாளர் மற்றும் அதற்கு அடிமையானவர் என்று குறிப்பிட்டு, கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவர் நளின் குமார் கடீல் சர்ச்சை கருத்தை வெளியிட்டு உள்ளார்.

கர்நாடகா காங்கிரஸ் பிரதமர் நரேந்திர மோடியை படிப்பறிவு இல்லாதவர் என்று கூறி கன்னடத்தில் டுவீட் செய்து இருந்தது. பிரதமர் மோடியின் சர்ச்சைக்குரிய டுவீட்டை கட்சியின் சமூக ஊடக குழு நீக்கியதாக டி.கே.சிவகுமார் பின்னர் அறிவித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவர் நளின் குமார் கடீல் ராகுல் காந்தி யார்? ராகுல் காந்தி போதைக்கு அடிமையானவர் மற்றும் போதைப்பொருள் விற்பவர். இந்த தகவல்கள் ஊடகங்களில் வந்தது உள்ளது. உங்களால் கட்சியை கூட நடத்த முடியாது என கூறினார்.

நளின்குமார் கடீலின் கருத்துக்களுக்குப் பிறகு, டி.கே.சிவகுமார் மீண்டும் டுவிட்டரில் தவறான கருத்துக்களுக்காக பா.ஜ.க.விடம் மன்னிப்பு கோரினார்.

அவர் தனது டுவிட்டரில்

நேற்றே நான் சொன்னேன், நாங்கள் அரசியலில் எங்கள் எதிரிகளுக்கு கூட மரியாதைக்குரியவர்களாக இருக்க வேண்டும் என எண்ணுகிறோம். இதற்கு பா.ஜ.க என்னுடன் உடன்படும் என்று நம்புகிறேன், மேலும் ராகுல் காந்திக்கு எதிரான தங்கள் மாநிலத் தலைவரின் தவறான மற்றும் சட்டவிரோத கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com