தேசிய செய்திகள்

பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் - எலான் மஸ்க் கோரிக்கை + "||" + Tesla requests Musk-Modi meeting to resolve import duty issues

பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் - எலான் மஸ்க் கோரிக்கை

பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் -  எலான் மஸ்க் கோரிக்கை
உலக பெரும்பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
புதுடெல்லி,

உலக பெரும்பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தலைமையிலான, மின்சார வாகனங்களை தயாரிக்கும் 'டெஸ்லா' நிறுவனம், இந்தியாவில் இறக்குமதி வரியை குறைக்குமாறு, பிரதமர் அலுவலகத்துக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. அத்துடன் இது குறித்து எலான் மஸ்க், பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு வழங்குமாறும் அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 

டெஸ்லா நிறுவனம், இந்திய சந்தையில் நுழைவதற்கு முன்பாகவே, மின்சார கார்களுக்கான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என கோரி வருகிறது. இந் நிறுவனம் முதல்கட்டமாக கார்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.