கர்நாடகத்தில் புதிதாக 2,032 பேருக்கு கொரோனா

கர்நாடகத்தில் புதிதாக 2,032 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் புதிதாக 2,032 பேருக்கு கொரோனா
Published on

பெங்களூரு:

கர்நாடகத்தில் நேற்று 30 ஆயிரத்து 638 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 2 ஆயிரத்து 32 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 1,202 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்லாரியில் 2 பேரும், தார்வார், கொப்பல், உத்தரகன்னடாவில் தலா ஒருவரும் என மொத்தம் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

ஒரே நாளில் 1,686 பேர் குணம் அடைந்தனர். 10 ஆயிரத்து 395 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு விகிதம் 6.63 ஆக உள்ளது. மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com