கர்நாடகத்தில் திரவுபதி முர்மு பிரச்சார கூட்டத்தில் பங்கேற்காத 21 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் - விளக்கம் கேட்டு கட்சி தலைமை நோட்டீஸ்


கர்நாடகத்தில் திரவுபதி முர்மு பிரச்சார கூட்டத்தில் பங்கேற்காத 21 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் - விளக்கம் கேட்டு கட்சி தலைமை நோட்டீஸ்
x
Gokul Raj B 18 July 2022 4:59 AM IST
t-max-icont-min-icon

கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று பசவராஜ் பொம்மை உத்தரவிட்டு இருந்தார்.

பெங்களூரு,

ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் பா.ஜனதா கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த்சின்காவும் போட்டியிடுகின்றனர். இதையொட்டி பா.ஜனதா கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு பெங்களூருவில் பிரசாரம் செய்தார். அவர் கடந்த 10-ந் தேதி இங்கு எம்.எல்.ஏ.க்களிடம் வாக்கு சேகரித்தார். அவர் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார்.

இந்த கூட்டத்தில் கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டு இருந்தார். ஆனால் சுமார் 21 எம்.எல்.ஏ.க்கள் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். இந்த நிலையில் அந்த கூட்டத்தை புறக்கணித்த 21 எம்.எம்.எல்.ஏ.க்களுக்கும் பா.ஜனதா கட்சி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


Next Story