பீகாரில் மர்ம நபர்களால் தீக்கிரையாக்கப்பட்ட 21 வீடுகள்


பீகாரில் மர்ம நபர்களால் தீக்கிரையாக்கப்பட்ட 21 வீடுகள்
x

பதற்றம் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருப்பதாக எஸ்.பி. அபினவ் திமான் தெரிவித்துள்ளார்.

பாட்னா,

பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் உள்ள மாஞ்சி தோலாவில் நேற்று இரவு 7 மணியளவில் அப்பகுதிக்கு வந்த மர்மநபர்கள் அங்கு இருந்த வீடுகளுக்கு தீ வைத்தனர். இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த தீயில் சுமார் 21 வீடுகள் எரிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் 10 பேரை கைது செய்துள்ளனர். மேலும் மற்ற குற்றவாளிகளை பிடிக்க தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என்று போலீசார் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையில் நிலத் தகராறுதான் இந்த சம்பவத்துக்கு காரணம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. வீடுகள் எரிக்கப்படும்போது வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தற்போது அப்பகுதியில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், பதற்றம் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருப்பதாக எஸ்.பி. அபினவ் திமான் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story