கர்நாடகாவில் மேலும் 2,130 -பேருக்கு கொரோனா


கர்நாடகாவில் மேலும் 2,130 -பேருக்கு கொரோனா
x

கர்நாடகாவில் மேலும் 2,130 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,130- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு இன்று 4 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40 லட்சத்து 03 ஆயிரத்து 785- ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40 ஆயிரத்து 101- ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,395- ஆகும். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 39 லட்சத்து 53 ஆயிரத்து 776- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்து 866- ஆக உள்ளது. பெங்களூரு நகரத்தி மட்டும் 1,615- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Next Story