கணவனுடன் ஏற்பட்ட பிரச்சனையில் தேநீரில் விஷம் கலந்து தாய் கொடுத்ததில் 3 குழந்தைகள் உயிரிழப்பு


கணவனுடன் ஏற்பட்ட பிரச்சனையில் தேநீரில் விஷம் கலந்து தாய் கொடுத்ததில் 3 குழந்தைகள் உயிரிழப்பு
x

கணவனுடன் ஏற்பட்ட பிரச்சனையில் தேநீரில் விஷம் கலந்து தாய் கொடுத்ததில் 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

காசிபூர்,

உத்தரபிரதேச மாநிலம் காசிபூரில், கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையில் விஷம் கலந்த தேநீரை குழந்தைகளுக்கு தாய் கொடுத்ததில் 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுனிதா யாதவ் என்ற பெண் ஒரு வாரத்திற்கு முன்பு தனது மைத்துனருடன் ஏற்பட்ட தகராறில் தாதானி கிராமத்தில் உள்ள தனது பெற்றோரின் வீட்டிற்கு வந்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு, போனில் கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையில் திங்கள்கிழமை தனது குழந்தைகளுக்கு விஷம் கலந்த தேநீரைக் கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த தேநீரை அருந்திய ஹிமான்ஷு (வயது 10), பியூஷ் (வயது 8), சுப்ரியா (வயது 5) ஆகிய மூன்று குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வெளியில் விளையாடிக் கொண்டிருந்ததால் நான்காவது குழந்தை உயிர் தப்பியது. அந்த பெண்ணின் மைத்துனர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 More update

Next Story