உ.பி: இரண்டு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து... 3 பேர் பலி- 20 பேர் படுகாயம்

உத்தரபிரதேசத்தில் இரண்டு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.
உ.பி: இரண்டு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து... 3 பேர் பலி- 20 பேர் படுகாயம்
Published on

நொய்டா,

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவின் நாலெட்ஜ் பார்க் அருகே கிரேட்டர் நொய்டா எக்ஸ்பிரஸ்வேயில் இரண்டு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக கிரேட்டர் நொய்டா காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருபது பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மீட்பு பணியில் ஈடுபட்டுவரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பான விசாரணையையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com