மேற்கு வங்காளத்தில் லாரி மீது பேருந்து மோதி விபத்து - 3 பேர் பலி


மேற்கு வங்காளத்தில் லாரி மீது பேருந்து மோதி விபத்து - 3 பேர் பலி
x

மேற்கு வங்காளத்தில் லாரி மீது பேருந்து நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம், மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று பிற்பகல் லாரியுடன் பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் காயமடைந்தனர்.

சந்திரகோனா சாலையில் இருந்து கோவல்டோர் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று எதிர் திசையில் வந்த சரக்கு லாரி மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 3 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

இதையடுத்து அங்கு மீட்பு பணி நடந்தது. காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு கர்பேட்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் சிலர் மெதினிபூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


Next Story