போலி தங்க நாணயங்கள் கொடுத்து ரூ.3 கோடி மோசடி - 3 பேர் கைது..!
போலி தங்க நாணயங்கள் கொடுத்து ரூ.3 கோடி மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பால்கர்,
போலி தங்க நாணயங்கள் கொடுத்து ரூ.3 கோடி மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக தானே மாவட்டத்தில் உள்ள டோம்பிவலியைச் சேர்ந்த நபரிடம் கடந்த ஏப்ரல் 18-ந்தேதி 3 பேர் தங்க நாணயங்கள் இருப்பதாகக் கூறி, மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அருகில் வைத்து ஒரு பையை கொடுத்துவிட்டு ரூ.3.12 கோடி வாங்கிச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் அந்த தங்க நாணயங்கள் போலியானது என்பது தெரிய வரவே ஏமாந்த நபர் இதுகுறித்து போலீசில் புகாரளித்தார். இதையடுத்து குஜராத் மாநிலம் வதோதராவில் இருந்து கிசன்பாய் கஸ்தூரிபாய் மார்வாடி சலாத், ஹரிபாய் பிரேமாபாய் மார்வாடி சலாத் மற்றும் மணீஷ் கமலேஷ்பாய் ஷா ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
ஜூலை 21-ம் தேதி குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து ரூ. 2.18 கோடி மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ள பணம் எங்கே இருக்கிறது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.