3 ஆம்னி பஸ்கள் தீப்பிடித்து எரிந்தது
பெங்களூருவில் 3 ஆம்னி பஸ்கள் தீப்பிடித்து எரிந்தது.
கெங்கேரி:
பெங்களூரு மைசூரு ரோட்டில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில், தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஆம்னி பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென ஒரு பஸ்சில் தீப்பிடித்து எரிந்தது. அந்த தீ மளமளவென பரவி அருகே நின்ற 2 பஸ்கள் மீதும் பிடித்தது. இதனால் 3 பஸ்களிலும் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதுபற்றி அறிந்ததும் தீயணைப்பு படையினர் 2 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் பஸ்களில் பிடித்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி அணைத்தனர். ஆனாலும் பஸ்களின் பாதி பகுதி எரிந்து சேதம் அடைந்தது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து கெங்கேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story