கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் விற்பனை; காதல் ஜோடி உள்பட 3 பேர் கைது


கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் விற்பனை; காதல் ஜோடி உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 17 Nov 2022 6:45 PM GMT (Updated: 17 Nov 2022 6:45 PM GMT)

கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் விற்ற காதல் ஜோடி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு:

பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் போதைப்பொருட்கள் விற்பனை செய்ததாக காதல் ஜோடி உள்பட 3 பேரை கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர்கள் கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த சிகில் வர்கீஸ் (வயது 32), இவரது காதலி கோயம்புத்தூரை சேர்ந்த விஷ்ணு பிரியா (22), பெங்களூருவை சேர்ந்த விக்ரம் (23) என்று தெரிந்தது. சிகில் வர்கீசும், விஷ்ணு பிரியாவும் கொத்தனூரில் வாடகை வீட்டில் 2 பேரும் திருமணம் செய்யாமலேயே வசித்து வந்தனர். இவர்களை கடந்த மார்ச் மாதம் போதைப்பொருட்கள் விற்றதாக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். கடந்த 2 மாதத்திற்கு முன்பு தான் 2 பேரும் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்திருந்தனர்.

இந்த நிலையில், பரப்பனஅக்ரஹாரா போலீஸ் எல்லசைக்கு உட்பட்ட பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கும், கம்ப்யூட்டர் என்ஜினீயர்களுக்கும் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து போலீசார் சோதனை நடத்திய போது 3 பேரும் சிக்கி இருந்தார்கள். அவர்களிடம் இருந்து ரூ.7 கோடி மதிப்பிலான ஆசிஷ் போதை ஆயில் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story