ஜம்மு காஷ்மீரில் படகு வீடு தீ பிடித்து விபத்து: சுற்றுலா பயணிகள் 3 பேர் உயிரிழப்பு


ஜம்மு காஷ்மீரில் படகு வீடு தீ பிடித்து விபத்து:  சுற்றுலா பயணிகள் 3 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 11 Nov 2023 5:35 PM IST (Updated: 11 Nov 2023 8:25 PM IST)
t-max-icont-min-icon

படகு வீடு தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள டால் ஏரி மிகச்சிறந்த சுற்றுலா தளமாக விளங்குகிறது. இந்த ஏரியில் ஹவுஸ் போட் என அழைக்கப்படும் படகு வீடு சுற்றுலா மிகவும் பிரபலமானது ஆகும். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் ஹவுஸ்போட்டில் உல்லாசமாக சவாரி செய்து வருவதை பார்க்க முடியும்.

இந்த நிலையில், இன்று அதிகாலை, டால் ஏரியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஹவுஸ் போட்கள் எரிந்து நாசம் ஆகின. இந்த தீ விபத்தில் வங்காளதேசத்தை சேர்ந்த மூன்று சுற்றுலா பயணிகள் பலியாகினர். வங்காளதேசத்தை சேர்ந்த மூன்று பேரும் சுற்றுலாவுக்கு ஜம்மு காஷ்மீர் வந்துள்ளனர். அங்குள்ள சஃபீனா ஹவுஸ் போட்டில் தங்கியிருந்த போது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் கூறுகையில், டால் ஏரியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 5 ஹவுஸ் போட்கள் தீ பிடித்து விபத்துக்குள்ளானதாகவும் தீ பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடப்பதாகவும் கூறினர்.

1 More update

Next Story