மசூத், பாசில் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம்; முஸ்லிம் அமைப்பினர் வழங்கினர்


மசூத், பாசில் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம்; முஸ்லிம் அமைப்பினர் வழங்கினர்
x

படுகொலை செய்யப்பட்ட மசூத், பாசில் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சத்தை முஸ்லிம் அமைப்பினர் வழங்கினர்.

மங்களூரு;


தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகாவை சேர்ந்தவர் மசூத் (வயது 19). இவர் கடந்த மாதம் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பெல்லாரேடோலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை வழக்கில் தொடர்புடைய 8 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதேபோல் சூரத்கல் அருகே மங்கள்பேட்டை பகுதியை சேர்ந்த பாசில் (23) என்ற வாலிபர் மர்மகும்பலால் படுகொலை செய்யப்பட்டார். அதுதொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட மசூத் மற்றும் பாசில் ஆகியோர் குடும்பத்தினரை முஸ்லிம் அமைப்பினர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர்.

அப்போது அவர்கள் பேசுகையில், கொலை சம்பவங்கள் நடப்பதை போலீசார் தடுக்க வேண்டும். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.


Next Story