போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்; 3,600 கி.மீ. தூரத்தை 22 நாட்களில் சைக்கிளில் கடந்த கர்நாடக போலீஸ் அதிகாரி


போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்; 3,600 கி.மீ. தூரத்தை 22 நாட்களில் சைக்கிளில் கடந்த கர்நாடக போலீஸ் அதிகாரி
x

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரத்துக்காக 3,600 கி.மீ. தூரத்தை 22 நாட்களில் கர்நாடக போலீஸ் அதிகாரி சைக்கிளில் கடந்து சாதனை படைத்துள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் உப்பள்ளியை சேர்ந்தவர் முருகேஷ் சன்னன்னவர். இவர் உப்பள்ளியில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். போலீஸ் அதிகாரியான முருகேஷ், சிறுவயது முதலே சைக்கிள் ஓட்டுவதில் தீராத அன்பு கொண்டிருந்தார். இந்த நிலையில், இளைய தலைமுறை இடையே 'சே நோ டிரக்ஸ்' என்ற பெயரில் போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சைக்கிள் பயணம் செய்ய முடிவு செய்தார். இதற்காக அவர் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிள் பயணம் செய்ய முடிவு செய்தார். அதன்படி கடந்த ஆண்டு (2021) டிசம்பர் மாதம் காஷ்மீரில் இருந்து 'கே2கே' (காஷ்மீர் டூ கன்னியாகுமரி) என்ற பெயரில் சைக்கிள் பயணத்தை தொடங்கினார்.

கடும் குளிர், கனமழை, கடுமையான வெயில் ஆகியவற்றை சமாளித்து 9 மாநிலங்கள் வழியாக 22 நாட்களில் கன்னியாகுமரிக்கு சென்றடைந்தார். அதாவது காஷ்மீர்-கன்னியாகுமரி இடையே மொத்தம் 3,649 கிலோ மீட்டர் தூரத்தை 22 நாட்களில் கடந்து சாதனை படைத்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். மேலும் இந்திய சாதனை புத்தகத்திலும் போலீஸ் அதிகாரி முருகேஷ் இடம்பிடித்துள்ளார். இதனை மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு சமர்ப்பிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.


Next Story