சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவர்கள்! தலைமை ஆசிரியரை கண்டதும் ஓட்டம்! ஆனால் தலைமை ஆசிரியரும்....!


சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவர்கள்! தலைமை ஆசிரியரை கண்டதும் ஓட்டம்! ஆனால் தலைமை ஆசிரியரும்....!
x

மாணவியை 3 பேர் பலாத்காரம் செய்வதை கண்டு வேகமாக ஓடி வந்துள்ளார். இவர் வருவதை பார்த்து 4 பேரும் அங்கிருந்து ஓடி சென்றுள்ளனர்.

பாட்னா

பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் 14 வயது மாணவி ஒருவர் கழிப்பறையை பயன்படுத்த காட்டு பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது நான்கு இளம் வயது சிறுவர்கள் அந்த மாணவியை அங்கிருந்து தூக்கி சென்றுள்ளனர். அடர்த்தியான காட்டு பகுதிக்கு கொண்டு சென்று அங்கே கட்டி வைத்துள்ளனர். பிறகு அவர்கள் மாறி மாறி அந்த மாணவியை பலாத்காரம் செய்துள்ளனர்.

சிறுமியும் உதவி கோரி கூச்சல் போட்டு கத்தியுள்ளார். ஆனால் சிறுமிக்கு உதவ யாரும் வரவில்லை. இந்த நிலையில்தான் நான்கு நபர்களில் கடைசி ஆள் வன்புணர்வு செய்யும் போது அங்கேயே சுரேந்திர குமார் பாஸ்கர் என்ற அப்பகுதி பள்ளி ஹெட்மாஸ்டர் வந்து இருக்கிறார். அவரும் கழிப்பறைக்கு செல்வதற்காக அங்கே வந்து இருக்கிறார். இந்த ஆசிரியர் எதோ சத்தம் கேட்கிறதே என்று அவர்களை நோக்கி வந்துள்ளார்.

அப்போதுமாணவியை 3 பேர் பலாத்காரம் செய்வதை கண்டு வேகமாக ஓடி வந்துள்ளார். இவர் வருவதை பார்த்து 4 பேரும் அங்கிருந்து ஓடி சென்றுள்ளனர். அதன்பின் ஆடையின்றி கிடந்த மாணவியை பார்த்ததும் ஆசிரியர் சுரேந்திர குமார் பாஸ்கரும், அவரை பலாத்காரம் செய்துள்ளார்.

மாணவியை கொடூரமாக தாக்கி பலாத்காரம் செய்துள்ளார். இவர் அங்கு உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கிறார். அந்த மாணவியை ரத்தம் வடிய வடிய காட்டுப்பகுதியில் விட்டு சென்றுள்ளார் அந்த ஆசிரியர்.

இதையடுத்து நீண்ட நேரத்திற்கு பின் சுயநினைவு பெற்றுமாணவி வீட்டிற்கு வந்துள்ளார். இதஒ தொடர்ந்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸ் புகாரில் தன்னை பலாத்காரம் செய்த 4 பேர் மீதும் அந்த மாணவி புகார் அளித்தார்.

அதேபோல் அந்த ஆசிரியர் மீதும் அந்த மாணவி புகார் அளித்துள்ளார். இதில் தற்போது போலீஸ் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த ஆசிரியர் தலைமறைவாகி உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story