அரசு அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை; ரூ.26½ லட்சம் அபராதம்


அரசு அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை; ரூ.26½ லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 18 March 2023 6:00 AM GMT (Updated: 18 March 2023 6:01 AM GMT)

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அரசு அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை, ரூ.26½ லட்சம் அபராதம் விதித்து மங்களூரு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டம் மூடபித்ரி நகரசபையில் இளநிலை பொறியாளராக வேலை பார்த்து வருபவர் பத்மநாபா. இவர் முல்கி டவுன் பஞ்சாயத்தில் இளநிலை பொறியாளராக வேலை பார்த்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக கடந்த 2015-ம் ஆண்டு அவர் மீது லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர் மீது மங்களூரு 3-வது கூடுதல் கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர். இந்த வழக்கு மங்களூரு கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நீதிபதி பி.பி.ஜகாதி நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார். அப்போது, பத்மநாபா மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.26½ லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராத தொகையை கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறி இருந்தார்.



Next Story