இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 5 சிறுவர்கள் சிக்கினர்


இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 5 சிறுவர்கள் சிக்கினர்
x

உப்பள்ளியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 5 சிறுவர்கள் சிக்கியுள்ளனர்.

உப்பள்ளி;

தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் பழைய உப்பள்ளி போலீஸ் எல்லைக்குட்பட்ட ஆனந்த நகர் பகுதியில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த சாலையில் சந்தேகத்திற்கு இடமாக 3 மோட்டார் சைக்கிளில் 5 பேர் வந்து கொண்டிருந்தனர். அவா்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.

அவர்கள் பள்ளி மாணவர்கள் போல் சீருடை அணிந்திருந்தனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அவா்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் 5 பேரிடமும் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் 5 பேரும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதும், இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை, உப்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். இவர்களிடமிருந்து 4 சைக்கிள்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story