அரியானாவில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது மசூதியில் காவி கொடி ஏற்றிய 5 பேர் கைது


அரியானாவில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது மசூதியில் காவி கொடி ஏற்றிய 5 பேர் கைது
x

அரியானாவில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது மசூதியில் காவி கொடி ஏற்றிய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சோனிபட்,

கடந்த வியாழக்கிழமை அன்று ராம நவமி கொண்டாட்டத்தின் போது கார்கோடா மசூதியில் மத முழக்கங்களை எழுப்பியதற்காகவும், காவிக்கொடி ஏற்றியதற்காகவும் 5 பேரை சோனிபட் போலீசார் கைது செய்துள்ளனர்.

வியாழக்கிழமை அரியானாவில் உள்ள சோனிபட்டின் கார்கோடாவில் ராம நவமியைக் கொண்டாடும் வகையில் இந்து அமைப்புகளால் ஊர்வலம் நடத்தப்பட்டது. அப்போது சிலர், கார்கோடா மசூதியில் நமாஸ் நடந்து கொண்டிருந்த போது மத முழக்கங்களை எழுப்பியவாறு உள்ளே நுழைந்தனர். அங்கு அவர்கள் காவி கொடிகளை ஏற்றினர்.

காவிக்கொடியுடன் கார்கோடா மசூதிக்குள் அவர்கள் நுழையும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கார்கோடா போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுவரை 5 பேரை கைது செய்துள்ளனர். மேலும் சிசிடிவி காட்சிகளில் உள்ள மற்றவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.

கார்கோடாவில் அமைதியை நிலைநாட்டவும், சட்டம் ஒழுங்கு நிலைமை கட்டுக்கடங்காமல் போவதைத் தடுக்கவும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story