இந்தியர்களை ஏமாற்றி ரூ.500 கோடி மோசடி: சீன கடன் செயலிகளை ஒடுக்காதது ஏன்? - காங்கிரஸ் கேள்வி
இந்தியர்களை ஏமாற்றி ரூ.500 கோடி மோசடி செய்த விவகாரத்தில் சீன கடன் செயலிகளை ஒடுக்காதது ஏன் என காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.
புதுடெல்லி,
காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கவுரவ் வல்லப் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாட்டில் 1,100 மின்னணு கடன் செயலிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சட்டவிரோதமாக 600 கடன் செயலிகள் இயங்கி வருவதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. சீன கடன் செயலிகளும் இதில் அடங்கும்.இந்த செயலிகள், இந்தியர்களை கடன் வலையில் வீழ்த்தி, ரூ.500 கோடிவரை முறைகேடாக சம்பாதித்துள்ளன. அவர்களின் மிரட்டலுக்கு 52 இந்தியர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இருப்பினும், அந்த செயலிகளை ஒடுக்காதது ஏன்? அதற்கு மோடி அரசிடம் எந்த வியூகமோ, திட்டமிடலோ இல்லை என்று அவர் கூறினார்.
Related Tags :
Next Story