"பென்சில், மேகி விலை அதிகரித்துவிட்டது" - பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய 6 வயது சிறுமி


பென்சில், மேகி விலை அதிகரித்துவிட்டது - பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய 6 வயது சிறுமி
x

Image Courtesy : PTI / Twitter 

விலைவாசி உயர்வு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறுமி எழுதியுள்ள கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

லக்னோ,

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 6-வயது சிறுமி விலைவாசி உயர்வு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உத்தரப் பிரதேசம் மாநிலம், கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள சிப்ரமாவ் நகரைச் சேர்ந்த கிருத்தி துபே என்ற சிறுமி ஒன்றாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் விலைவாசி உயர்வு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், "என் பெயர் கிருதி துபே. நான் 1ம் வகுப்பு படிக்கிறேன். சில பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

எனது பென்சில் மற்றும் ரப்பர் கூட விலை உயர்ந்துள்ளது. மேகியின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது பென்சில் கேட்டால் அம்மா அடிப்பார்கள். நான் என்ன செய்ய வேண்டும்? மற்ற மாணவர்கள் என் பென்சிலைத் திருடுகிறார்கள்" என எழுதியுள்ளார்.

நாட்டில் விலைவாசி உயர்வு குறித்து எதிர்க்கட்சிகள் மத்திய அரசு மீது தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைக்கும் நிலையில் சிறுமியின் இந்த கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story