கர்நாடகத்தில் புதிதாக 60 பேருக்கு கொரோனா

கர்நாடகத்தில் புதிதாக 60 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்று 5 ஆயிரத்து 959 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூரு நகரில் 32 பேருக்கும், ஹாசனில் 7 பேருக்கும், தார்வாரில் 4 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்களில் 165 பேர் குணம் அடைந்தனர். தற்போது ஆயிரத்து 614 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். மாநிலத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் 1.04 ஆக உள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





