கர்நாடகத்தில் புதிதாக 600 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் புதிதாக 600 பேருக்கு கொரோனா
x

கர்நாடகத்தில் புதிதாக 600 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு: கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-கர்நாடகத்தில் நேற்று 28 ஆயிரத்து 46 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.


இதில் பெங்களூரு நகரில் 312 பேர், மைசூருவில் 54 பேர், ராமநகர், தட்சிண கன்னடாவில் தலா 22 பேர், ஹாசனில் 19 பேர் உள்பட 600 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. தார்வாரில் மட்டும் வைரஸ் தொற்றுக்கு 2 பேர் இறந்தனர். மற்ற 29 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. இதுவரை 40 லட்சத்து 54 ஆயிரத்து 746 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 40 ஆயிரத்து 205 பேர் உயிரிழந்து உள்ளனர். 589 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை 40 லட்சத்து 9 ஆயிரத்து 287 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 5 ஆயிரத்து 212 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

1 More update

Related Tags :
Next Story