ஒடிசாவில் மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் 650 பேர் சரண்


ஒடிசாவில் மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் 650 பேர் சரண்
x

ஒடிசா மாநிலத்தில் 650 தீவிர மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் சரணடைந்தனர்.

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலத்தில் 650 தீவிர மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் சரணடைந்தனர். அவர்கள் ஒடிசா-ஆந்திரா எல்லையில் மல்காங்கிரி மாவட்டத்தின் அடர்ந்த உட்புற கிராமங்களை சேர்ந்தவர்கள்.

பெரும்பாலானோர் உள்ளூர் கிராம குழுக்களிலோ, மாவோயிஸ்டு தொடர்புடைய கலாசார இயக்கத்திலோ இருப்பவர்கள் ஆவர். போலீசாரிடம் சரணடைவதற்கு முன்பு, அவர்கள் மாவோயிஸ்டு புத்தகங்களையும், சீருடைகளையும் தீயிட்டு கொளுத்தினர்.

இவர்கள் அப்பாவிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்த மாவோயிடுகளுக்கு உதவி வந்தனர் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.


Next Story