ஆட்டோ மீது லாரி மோதி விபத்து; வேலை முடிந்து வீட்டிற்கு சென்ற 7 பெண்கள் உடல்நசுங்கி பலி


ஆட்டோ மீது லாரி மோதி விபத்து; வேலை முடிந்து வீட்டிற்கு சென்ற 7 பெண்கள் உடல்நசுங்கி பலி
x

வேலை முடிந்து பெண்கள் ஆட்டோவில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தனர்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பிடர் மாவட்டம் சித்தகுமா தாலுகாவை சேர்ந்த பெண்கள் 10-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தனர்.

பிமலஹிடா என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் எதிரே வந்த லாரி ஆட்டோ மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஆட்டோவில் பயணித்த 7 பெண்கள் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர்.

மேலும், இந்த விபத்தில் லாரி, ஆட்டோ டிரைவர்கள் உள்பட மொத்தம் 11 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நிலையில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலை முடிந்து விடு திரும்பியபோது விபத்தில் 7 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story