சிவமொக்கா மாநகராட்சி சார்பில் புதிதாக 70 கடைகள் ; முன்னாள் மந்திரி ஈசுவரப்பா திறந்து வைத்தார்


சிவமொக்கா மாநகராட்சி சார்பில் புதிதாக 70 கடைகள் ;  முன்னாள் மந்திரி ஈசுவரப்பா திறந்து வைத்தார்
x

சிவமொக்கா மாநகராட்சி சார்பில் புதிதாக கட்டப்பட்ட 70 கடைகளை முன்னாள் மந்திரி ஈசுவரப்பா திறந்து வைத்தார்.

சிவமொக்கா;

சிவமொக்கா டவுன் வினோபா நகர் பகுதியை சேர்ந்த வியாபாரிகள், மாநகராட்சி நிர்வாகத்திடம் புதிய கடைகள் கட்டி குறைந்த வாடகைக்கு விடும்படி கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற சிவமொக்கா மாநகராட்சி, எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது வினோபா நகர் பகுதியில் புதிதாக 70 கடைகளை கட்டி முடித்தது.

ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த கடைகளை திறந்து வியாபாரிகளுக்கு வாடகைக்கு விடப்படவில்லை. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் காலை கடைகளின் திறப்பு விழா நடந்தது. இதில் முன்னாள் மந்திரி ஈசுவரப்பா கலந்துகொண்டு ரிப்பன் வெட்டுவதன் மூலம் புதிய கடைகளை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சிவமொக்கா மாநகராட்சி மேயர் சுனிதா அண்ணப்பா உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். இதைதொடர்ந்து கடைகளை வியாபாரிகளுக்கு வாடகைக்குவிடும் பணி நடந்து வருகிறது. மின் கட்டணத்தை தவிர்த்து மாதம் கடைக்கு வாடகை ரூ.2 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story