ரெயில் மோதி 90 ஆடுகள் சாவு- இறைச்சி தின்ன வந்த கழுகுகளும் பலி


ரெயில் மோதி 90 ஆடுகள் சாவு- இறைச்சி தின்ன வந்த கழுகுகளும் பலி
x

கோப்புப்படம் 

கோரக்பூரில் இருந்து லக்னோ நோக்கி சென்ற ரெயில் ஆடுகள் மீது மோதியது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பல்ராம்பூர் அருகே ஒரு ஆடு மேய்க்கும் தொழிலாளி தன்னுடைய ஆடுகளுடன் ரெயில் தண்டவாளத்தில் சென்றுகொண்டிருந்தபோது கோரக்பூரில் இருந்து லக்னோ நோக்கி சென்ற ரெயில் ஆடுகள் மீது மோதியது.

மோதிய வேகத்திலேயே 90 செம்மறி ஆடுகள் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து செத்தன. தண்டவாளத்தில் சிதறி கிடந்த இறைச்சியை சாப்பிட பிணந்திண்ணி கழுகுகள் கூடின. அப்போது அதே தடத்தில் வந்த மற்றொரு ரெயிலில் அடிபட்டு 8 கழுகுகள் செத்தன.


Next Story