கர்நாடகத்தில் புதிதாக 939 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் புதிதாக 939 பேருக்கு கொரோனா
x

கர்நாடகத்தில் புதிதாக 939 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்று 11 ஆயிரத்து 750 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 939 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் பெங்களூரு நகரில் 813 பேருக்கும், மைசூருவில் 18 பேருக்கும், மண்டியாவில் 13 பேருக்கும், கலபுரகியில் 18 பேருக்கும், தட்சிண கன்னடாவில் 9 பேருக்கும், பல்லாரியில் 10 பேருக்கும், பெலகாவியில் 18 பேருக்கும், பீதர், சாம்ராஜ்நகரில் தலா 5 பேருக்கும், குடகில் 7 பேருக்கும், கோலாரில் 4 பேருக்கும் வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு நகரில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். ஒரே நாளில் 1,204 பேர் குணம் அடைந்தனர். 8 ஆயிரத்து 896 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Related Tags :
Next Story